அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்.. மொபைலில் அலர்ட் சத்தம்! அலறி அடித்து எழுந்த மக்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க நேரப்படி இன்று காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோர நகரமான மாலிபுவின் வடக்கே 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் அப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் அமெரிக்க நேரப்படி காலை 7:28 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸின் கடலோர நகரமான மாலிபுவிலிருந்து வடக்கே 4.3 மைல் தொலைவில் மையம் கொண்டு தாக்கியுள்ளது. அது கிட்டத்தட்ட 7 மைல் ஆழத்தில் இருந்தது.

இந்த நிலநடுக்கம் முதலில் 5.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவு செய்யப்பட்ட நிலையில் 4.6 ஆகக் குறைக்கப்பட்டு பின்னர் 4.7 ஆக திருத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஏராளமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். தூக்கத்தில் இருந்த மக்கள் ஏராளமானோர், இந்த நிலநடுக்கத்தால் திடுக்கிட்டு விழித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை நிலநடுக்க எமர்ஜென்சி அறிவிப்பை மக்களின் மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பியது. எனினும், இந்த எமெர்ஜென்சி அலர்ட் அமெரிக்க நேரப்படி காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் உள்கட்டமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை மற்றும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை.
கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானவை தாக்கத்தில் மிகச் சிறியவை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, பல நூறு நிலநடுக்கங்கள் ரிக்டரில் 3.0 அளவில் இருக்கின்றன.
15 முதல் 20 சதவீத நிலநடுக்கங்கள் மட்டுமே அளவு 4.0 ஐ விட அதிகமாக இருக்கும். வட அமெரிக்காவில், கலிபோர்னியாவை விட அலாஸ்கா ஆண்டுதோறும் அதிக நிலநடுக்கங்களை பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications