பாகிஸ்தானில் நிலநடுக்கத்திற்கு 30 பேர் படுகாயம் - டெல்லியில் தயார் நிலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 41 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்துள்ள 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் தலைநகர் புதுடில்லி, ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் உணரப்பட்டது.இது ரிக்டர்அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை மையாமாக கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், வடஇந்திய மாநிலங்களான டெல்லி, காஷ்மீர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கனிஸ்தானில், உள்ளூர் நேரப்படி, இரவு 11.44 க்கு தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், உயிரிழப்புகள் குறித்த தகவல் இல்லை.
இந்த நடுக்கத்தின் தாக்கம், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களின் ஏராளமான பகுதிகளில் உணரப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் தெரியவில்லை. டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபடியாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications