லைபீரியாவில் படுவேகமாக பரவும் 'எபோலா' வைரஸ்: பலர் பாதிக்கப்படும் அபாயம்- உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவியுள்ளது. அதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது.
எபோலா வைரஸ் தாக்கி கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியாவில் இதுவரை 2 ஆயிரத்து 100 பேர் பலியாகியுள்ளனர்.

செனகல்
எபோலா வைரஸ் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மற்றொரு நாடான செனகலுக்கும் பரவியுள்ளது.

மக்கள்
எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும், அதற்குள் 20 ஆயிரம் பேர் வைரஸால் தாக்கப்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லைபீரியா
லைபீரியாவில் உள்ள 15 கவுன்ட்டிகளில் 14ல் எபோலா வைரஸ் பரவியுள்ளது. மேலும் வைரஸ் படுவேகமாகப் பரவி வருவதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் எபோலாவால் பாதிக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோயாளிகள்
லைபீரியாவில் எபோலா மருத்துவ மையங்கள் புதிதாக திறக்ககப்பட்டு வருகின்றன. எத்தனை மையங்கள் திறந்தாலும் உடனே அவை எபோலா நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

டாக்சி
டாக்சிகள் மூலம் தான் லைபீரியாவில் எபோலா அதிகம் பரவி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு உத்தரவு
எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க இரவு நேரத்தில் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து லைபீரிய அரசு திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications