கொலைகார சிங்கள அதிகாரியை கைது செய்ய கோரி லண்டனில் தமிழர்கள் மாபெரும் போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிங்கள அதிகாரிக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போராட்டம்- வீடியோ

  லண்டன்: ஈழத் தமிழர்களின் கழுத்தை அறுத்து கொல்வேன் என கொலை மிரட்டல் விடுத்த சிங்கள அதிகாரி பெர்னாண்டோவை கைது செய்ய வலியுறுத்தி லண்டனில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

  இலங்கை சுதந்திர தின விழாவை புறக்கணித்த ஈழத் தமிழர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை தூதரகம் முன்பு இப்போராட்டத்தை அமைதிவழியில் ஈழத் தமிழர்கள் நடத்தினர்.

  இதில் ஆத்திரமடைந்த இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் பெர்னாண்டோ, சைகை மூலமாக ஈழத் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என மூன்று முறை மிரட்டினார். இது தொடர்பான வீடியோ தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

  இங்கிலாந்து எம்.பிக்கள் கோரிக்கை

  இங்கிலாந்து எம்.பிக்கள் கோரிக்கை

  இதனால் பெர்னாண்டோவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பெர்னாண்டோவை நாட்டை விட்டு வெளியேற்ற இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

  பெர்னாண்டோவுக்கு சிறிசேன ஆதரவு

  பெர்னாண்டோவுக்கு சிறிசேன ஆதரவு

  இதையடுத்து பெர்னாண்டோவை சஸ்பென்ட் செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்த சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்தார். இது உலகத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு

  நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு

  இந்நிலையில் பெர்னாண்டோவை கைது செய்ய வலியுறுத்தி லண்டனில் ஈழத் தமிழ் அமைப்பினர் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பெர்னாண்டோவை கைது செய்ய கோரியும் தமிழீழ விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

  செருப்படி போராட்டம்

  செருப்படி போராட்டம்

  அப்போது பெர்னாண்டோவின் உருவ படம் தீயிட்டு எரிக்கப்பட்டது. பெர்னாண்டோ படத்தை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை ஈழத் தமிழர்கள் பதிவு செய்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Eelam Tamils staged a protest outside the Sri Lankan High Commission in London against Srilanka Military Officer Fernando.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற