துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி!
துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நோன்பாளிகளுக்கு தமிழகத்து நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சி நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நோன்புக் கஞ்சியானது துபாய் தேரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளிவாசல், லத்திபா பள்ளிவாசல் மற்றும் அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ரமலான் மாதம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் நோன்பு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் துபாய் ஈமான் அமைப்பு சார்பில் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கங்சி வழங்கப்பட்ட வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறுகிறது

4000 பேருக்கு கஞ்சி
தினமும் நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோன்புக் கஞ்சியின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நோன்புக் கஞ்சியுடன் இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு பழம், ஜுஸ், பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நாட்டு இஸ்லாமியர்கள்
இதனை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்து நோம்பு கஞ்சியை அருந்தி மகிழ்கின்றனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஏ.ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், பொருளாளர் கீழை அப்துல் உபூர் காக்கா, துணைத் தலைவர் கீழை முஹம்மது மஹ்ரூப், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், சையது பாட்சா, லெப்பைக்குடிகாடு படேஷா பஷீர், வி.களத்தூர் சர்புதீன், இல்யாஸ், காயல் யஹ்யா முஹ்யித்தீன், ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் அலி, கம்பம், முஹம்மது அலி, சீனிபாவா, சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈமான் அமைப்புக்கு பாராட்டு
மேலும் லத்திபா பள்ளிவாசலில் காதர் முகைதீன், யாகூப் உள்ளிட்ட குழுவினரும், அஸ்கான் ஹவுஸ் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் காயல்பட்டணம் முஹம்மது ஈசா, ஹிதாயத்துல்லா, ரவூப் உள்ளிட்ட குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஈமான் அமைப்பு செய்து வரும் பணிகளை பாராட்டினார்.

கடுமையான வெப்பத்திலும்
கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தன்னார்வ தொண்டர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தனது அமீரகப் பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications