மம்மி படத்தில் வருவது போல கூட்டமாக வந்த தேள்கள்.. சரமாரி தாக்குதல்.. 500 பேர் உயிருக்கு போராட்டம்?!
கைரோ: மம்மி படத்தில் வருவது போலவே கூட்டம் கூட்டமாக வந்த தேள்கள் கடித்ததால் எகிப்தில் பலரின் உடல்நிலை மோசமாகி உள்ளது.
உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எகிப்தில் இருக்கும் அஸ்வான் நகரம். பழமையான கட்டிடங்கள், சிறிய அளவிலான பிரமிடுகள், நீர் நிலைகள் என்று மிகவும் பழமையான நகரம் ஆகும்.
அஸ்வான் நகரில் எப்படி பழைய கட்டிடங்கள் இருக்கிறதோ அதேபோல் பல லட்சம் தேள்களுக்கும் இந்த பகுதிதான் தாய் வீடு. ஆம் மம்மி படங்களில் வருவது போல இங்கு பல லட்சம் தேள்கள் பழைய கட்டிடங்களுக்கு இடையே பதுங்கி இருக்கிறது. அதிலும் அதிக விஷம் கொண்ட நீண்ட வால் கொண்ட தேள் வகைகள் இங்கே பல உள்ளன.

தேள்கள்
பல லட்சம் தேள்கள் பூமிக்கு கீழே பல இடங்களில் இங்கு கூடு அமைத்து உள்ளது. மம்மி சீரிஸ் படங்களை 90ஸ் கிட்ஸ் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதில் வருவது போலவே காட்சி அளிக்கும் ஒரு நகரம்தான் அஸ்வான். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போலவே அங்கும் கனமழை பெய்து வந்தது.

புயல்
திடீரென புயல் ஏற்பட்டு எகிப்தின் பல பகுதிகளை தாக்கியது. எகிப்தில் அஸ்வான் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக இன்று அதிகாலை வரை சாலைகளில் நீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழை காரணமாக பூமிக்கு அடியில் இருந்த தேள்கள் பல மொத்தமாக வெளியே வந்தது.

தாக்கியது
பலரின் வீடுகள், கடைகளுக்குள் புகுந்த தேள்கள் பலரை கடித்தத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த மக்கள் பலரை தேள்கள் சரமாரியாக தாக்கியது. மக்கள் பலரை தேள்கள் கடித்த நிலையில் 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள்.

சிகிச்சை
இவர்களின் உடலில் மோசமான அளவில் விஷம் ஏறி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேள் கடிதத்தில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எகிப்தில் இப்படி திடீரென தேள்கள் மக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications