எகிப்து: மினிபஸ் மீது ரயில் மோதி விபத்து: 24 பேர் பலி
கெய்ரோ: எகிப்தில், டிரக் மற்றும் மின்பஸ் மீது பயணிகள் ரயிலொன்று மோதியதில் 24 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
எகிப்து நாட்டில் கிசா மாவட்டத்தில் பானி ஸ்வைப் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, டிரக் மற்றும் மினிபஸ்ஸின் பின்புறம் பயங்கரமாக மோதியதில், 24 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கி பலியானவர்கள் மினிபஸ்ஸில் பயணம் செய்தவர்கள் என்பதும், அவர்கள் திருமணத்திற்கு சென்று திரும்பிய போது தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது இந்தப் பரிதாப விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
எவ்வாறு விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவடைந்த பின்னரே உண்மைகள் வெளிவரும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications