For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்புது எல்நினோ பருவநிலை- இந்தியாவில் வறட்சி ஏற்படும் அபாயம்!!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்:எல்நினோ எனப்படும் மோசமான காலநிலை மாற்றமானது நடப்பாண்டு மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் வறட்சி,உணவுப்பொருள் தட்டுபாடு போன்றவை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, ஈக்வடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது.

weather

எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.

கிழக்கு மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றானது கிழக்கு, மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.

மேற்கத்திய பசிபிக் பகுதி வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டிருக்கும். ஆனால் ,இந்த எல்நினோ காலநிலை மாற்றம் ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டிருக்கும்

இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது. இந்த எல்நினோவால் கிழக்கத்திய பசிபிக்கில் மழை அதிகரிக்கிறது

மேற்கத்திய பசிபிக்கில் வறட்சியை அதிகமாகிறது.இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் ஈக்வடோர் பொருளாதார ரீதியாக பாதிக்கபடுகிறது.

வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.

இந்த நிலை மீண்டும் திரும்புவதால் அத்தியாவசிய பொருட்களான அரிசி,கோதுமை,சர்க்கரைக்கு இந்தியா உட்பட்ட நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

English summary
The El Nino weather pattern that can trigger drought in India and some parts of the world while causing flooding in other regions is increasingly likely to return this year, hitting production of key foods such as rice, wheat and sugar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X