பார்க்கவே சிலிர்க்குதே.. புதிதாக திறக்கப்பட்ட சிறை.. சாரை சாரையாக படையெடுத்த கைதிகள்.. என்னங்க இது?
உலகிலேயே இருக்கும் பாதுகாப்பான சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
சான் சால்வடோர்: எல் சால்வடோர் நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட சிறைச்சாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டு மக்கள் இடையே இந்த சிறை சாலையின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
எல் சால்வடோர் நாடு உலகில் அதிகம் குற்றங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். முக்கியமாக இங்கே ரவுடியிசம் அதிகம்.
அதிலும் குழு குழுவாக மோதிக்கொள்ளும் கேங்க் வார் இங்கே அதிகம் நடக்கும். மேலும் முக்கியமாக ரவுடிகள் பலர் அணி அணியாக பிரிந்து தங்களுக்கு என்று ஒரு முத்திரை, உடை அலங்காரம், டாட்டூ என்று கேங்காக சுற்றுவார்கள்.

கேங்க்
இப்படி சுற்றும் கும்பல்கள் பல கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களில் ஈடுபடும். முக்கியமாக இவர்கள் போதை பொருள் கடத்தல், தங்கம், வைரம் கடத்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இவர்களை போன்றவர்களைத்தான் எல் சால்வடோர் நாட்டில் பல்வேறு முக்கிய சிறைகளில் போலீசார் அடைத்து வைத்து இருந்தனர். இந்த நிலையில்தான் இவர்களுக்கு என்றே தற்போது புதிய சிறை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. சிசாட் என்ற பெயரில் Center for the Confinement of Terrorism (CECOT) என்ற சிறை கட்டப்பட்டு உள்ளது. மோசமான கும்பல்களை அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை கட்டி வைத்துள்ளனர்.

சிறைச்சாலை
தலைநகர் சான் சால்வடார் நகரத்தில் இருந்து 46 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளம்பி உள்ளது. குற்றவாளிகள் மொட்டையோடு உள்ளே செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முக்கியமாக காலில் செருப்பு அணியாமல், உடல் முழுக்க டாட்டூ அணிந்தபடி இவர்கள் ஒரே ஒரு உள்ளாடையுடன் ஜெயிலில் வரிசையாக ஆட்டு மந்தை போல செல்கின்றனர். இந்த புகைப்படங்கள் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன.

சர்ச்சை
இவர்களை காவலாளிகள் மாடுகள் போல நடத்தும் புகைப்படங்கள்தான் தற்போது இணையம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. முக்கியமாக இவர்கள் முட்டிபோட்டபடி தரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. இவர்கள் எல்லோரின் கையிலும் பெரிய விலங்கும் மாட்டப்பட்டு உள்ளது. இந்த சிறைச்சாலை அந்த நாட்டில் கட்டப்பட்டதிலேயே பெரிய சிறைச்சாலை ஆகும். இங்கே ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேரை அடைக்க முடியும். மற்ற சிறைகளில் இருக்கும் கொடிய கைதிகளை இங்கே கொண்டு வர தொடங்கி உள்ளனர்.

எத்தனை
முக்கியமாக கேங்க் வாரில் கைதான பலரை இங்கே கொண்டு வந்துள்ளனர். இதுவரை 2000 பேர் இங்கே அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் எல்லோரும் கேங்க் வாரில் கைதான நபர்கள். அந்த நாட்டிலேயே இதுதான் அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஆகும். அதன் காரணமாகவே இங்கே இந்த கொடிய கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இடத்தில் இருந்து காற்று கூட வெளியே போக முடியாது. அந்த அளவிற்கு தீவிர பாதுகாப்பு கொண்டது. உலகிலேயே இருக்கும் பாதுகாப்பான சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications