For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். பிரதமர் அலுவலகம் ரூ. 76 லட்சம் பாக்கி.. செலுத்தாவிட்டால் இணைப்பு கட்.. ஈபி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் ரூ. 76 லட்சம் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் அதை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் மின்சார பாக்கி செலுத்தப்படவில்லை. ஏற்கெனவே 41 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ. 35 லட்சத்தையும் செலுத்தவில்லை.

Electricity board issues notice to Pakistan PM office

எனவே 76 லட்சம் ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கு இஸ்லாமாபாத் மின்சார வாரியம் பல முறை தகவல் அனுப்பியது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.... முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா அரசியல் பேச்சுஇந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.... முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா அரசியல் பேச்சு

தொடர்ந்து 2 மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் என்ற சட்டம் அமலில் உள்ளது. எனவே கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Islamabad Electricity board issues notice to Pakistan PM office for not paying Electric bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X