மனைவிகள் 3; குழந்தைகள்11; ஆனால் முரட்டு சிங்கிள்? எலன் மஸ்க் வாங்கிய ரூ.290 கோடி பங்களா!
அமெரிக்கா: தனது 11 குழந்தைகளுக்காக ரூ.290 கோடி மதிப்பில் பல வசதிகளைக் கொண்ட புதிய பங்களாவை எலன் மஸ்க் வாங்கி இருக்கிறார் என்ற தகவலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், கடந்த வாரம் வியக்க வைக்கும் ஒரு சாதனையைச் செய்தார். ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. டெஸ்லாவின் பிளாக்பஸ்டர் வருவாய் இதுதான் என அறிக்கைகள் சுட்டிக்காட்டின, அதைத் தொடர்ந்து அவரது நிகர மதிப்பின் அதிகரித்து, நிறுவனத்தின் பங்குகள் சுமார் 22% உயர்ந்தது. இதனால் உலகம் வியக்கும் வித்தைக்காரராக மீண்டும் பேசுபொருளானார் மஸ்க்.

இப்போது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி, தலைப்புச் செய்தியாகி இருக்கிறார் இந்த 11 குழந்தைகளின் தந்தை. எலன் பணம் சம்பாதிப்பதில் மட்டும் கில்லாடி இல்லை. குடும்ப வாழ்க்கையிலும் பெரிய கில்லாடி. இவருக்கு மொத்தம் 3 மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தச் செய்தி உங்களுக்கு புதியதாக இருந்தால் நீங்கள் கொஞ்சம் அப்டேட் ஆக இல்லை என்று அர்த்தம்.
இப்போது எலான் மஸ்க் தனது 11 குழந்தைகளுக்காகவும் 3 மனைவிகளுக்காகவும் சேர்த்து ரூ.290 கோடி மதிப்பில் ஒரு பண்ணை பங்களாவை வாங்கியுள்ளார். அதாவது 35 மில்லியன் டாலர் மதிப்பு. ஆஸ்டினில் உள்ள அந்தப் பண்ணை பங்களா 14,400 சதுர அடி கொண்டது. இவரது இத்தாலிய டஸ்கன் பங்களாவைப் போன்று தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய வில்லாவில் ஆறு படுக்கை அறைகள் உள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, டெக் டைட்டன் எலான் மஸ்க், தனக்கு 'சொந்தமாக வீடே இல்லை' எனச் சொல்லும் அளவுக்கு அனைத்து சொத்துகளையும் விற்பதாக அறிவித்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். அது உலகம் முழுக்க தலைப்புச் செய்தியானது. அவர் திவாலான போது உலக வர்த்தகம் சோகத்தில் ஆழ்ந்தது.
அடுத்து 2024 ஆம் ஆண்டிற்குள், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்று சாம்ராஜ்யத்தை மீண்டு உருவாக்கிக் காட்டினார். இப்போது தனது 11 குழந்தைகள் மற்றும் மூன்று முன்னாள் மனைவிகள் ஆகிய அனைவருக்கும் சேர்த்து இந்த ரூ. 295 கோடி பண்ணையை வீட்டை வாங்கி இருக்கிறார் இது பற்றிய செய்தியை தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியாகும் வரை எலன் மஸ்க் தனது புதிய பங்களா பற்றிய செய்திகளில் ரகசியம் காத்து வந்தார் என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வாங்கிய பிறகே செய்தி கசிந்துள்ளது. இதில் ஹைலட் ஆன தகவல் என்னவென்றால், எலன் மஸ்க் சில வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்களின் வீடுகளின் மதிப்பை விட 20 முதல் 70% அதிகமான தொகையை வழங்கியுள்ளார் என்பதுதான். தன் பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் மிகச் சுதந்திரமாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அதிகப் பணத்தைச் செலவழித்து வாங்கி இருக்கிறார்.
எலன் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுடன் 5 குழந்தைகள் உள்ளனர். இந்த ஜோடி 2000 முதல் 2008 வரை திருமண உறவிலிருந்தது. அடுத்து பாடகி கிரிம்ஸ். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் யார் கட்டுப்பாட்டில் வளரவேண்டும் என்பதற்கான உரிமையைப் பெற இந்த ஜோடி சட்டப் போராட்டத்தில் இருப்பினும், மஸ்க் மற்றும் கிரிம்ஸ் குழந்தைகளின் காவலில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மூன்றாவது மனைவியான ஷிவோன் ஜிலிஸுடன் மூன்று குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் 38 வயதான ஜிலிஸ் ஏற்கனவே தனது குழந்தைகளுடன் எலன் மஸ்க் வாங்கியுள்ள புதிய வீட்டிற்குக் குடியேறிவிட்டார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதாச்சாரம் குறைந்து வருவது குறித்து தனது கவலைகளைப் பல முறை எலன் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். அதற்காகக் குரல் கொடுத்தும் வருகிறார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மஸ்க், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தனது விந்தணுவை தானம் செய்தும் இருக்கிறார். அவர்களில் ஒருவர்தான், முன்பு துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட நிக்கோல் ஷனாஹன். மஸ்க்குடன் உறவு வைத்திருப்பதாக வெளியான செய்திகளை ஷனஹான் மறுத்திருந்தார். அது உண்மை இல்லை என்றும் நிராகரித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மஸ்க், உலகளாவிய மக்கள்தொகை பெரிய சரிவு ஏற்படப்போகிறது என்றும் அது மனிதக்குலத்தை அழிக்கும் என்றும் தான் நம்புவதாகக் கூறியிருந்தார். மேலும் "குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தேசிய அவசரநிலையாகக் கருதப்பட வேண்டும்" என்று கடந்த ஜூன் மாதம் மஸ்க் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மூன்று மனைவிகள் 11 குழந்தைகள் என மிகப்பெரிய குடும்ப உறுப்பினர்களை எலன் மஸ்க் கொண்டிருந்தாலும் இப்போது அவர் ஒரு முரட்டு சிங்கிள்தான். யாரும் சட்டப்படி அவரது மனைவியாக இல்லை.












Click it and Unblock the Notifications