தமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15-ல் லண்டனில் ஒன்றிணைந்து போராடும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்!
தமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15 லண்டனில் இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடவுள்ளனர்.
லண்டன் : தமிழக வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கான லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக வரும் ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்து வாழ் தமிழர்கள் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் 50 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் போராட்டங்களால், தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து வாழ் தமிழர்கள் வருகிற ஏப்ரல் 15ம் தேதி இந்தியத் தூதரகம் முன்பு அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்திற்கு இது வரை லண்டன் தமிழ் மக்கள், தமிழர் ஒருமைப்பாடு இயக்கம், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழர் முன்னேற்ற கழகம், உலக தமிழ் அமைப்பு, லண்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறப்போரில் தங்களை இணைத்து ஆதரவை வழங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு தொடங்கி காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன், கெயில், நியூட்ரினோ, சாகர் மாலா என தொடர்ந்து தமிழக வாழ்வாதராத்தை சிதைக்கும் திட்டங்களையும், இந்தி திணிப்பின் மூலம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கண்டித்து இந்த அறபோராட்டத்தின் மூலமான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications