கிழக்கு உக்ரைனில் சண்டைக்கு நடுவே மலேசிய விமான பயணிகளின் உடல்களை மீட்ட நிபுணர்கள் குழு
கீவ்: உக்ரைனில் கடந்த மாதம் 16ம் தேதி ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 16ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
விமானம் தாக்கப்பட்ட பிறகு அதன் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்கள் 20 சதுர கிமீ தூரம் வரை சிதறி விழுந்தன.

தேடல்
கிழக்கு உக்ரைனில் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு புரட்சிப்படைக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

உடல் பாகங்கள்
சர்வதேச நிபுணர்கள் குழு கிழக்கு உக்ரைனில் தங்களின் தேடல் பகுதியை அதிகரித்துள்ளது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று பயணிகளின் உடல் பாகங்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சிலவற்றை கண்டுபிடித்தனர்.

தாக்குதல்
விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல் பாகங்கள் அதிக அளவில் கிடக்கும் கிராமத்தில் உக்ரைன் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே மோதல் நடந்தது. இதனால் நிபுணர்கள் தங்களின் விசாரணையை கைவிட்டுவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டியதாகிவிட்டது.

ஆங்கஸ் ஹூஸ்டன்
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் ஆஸ்திரேலிய குழுவின் தலைவரான ஆங்கஸ் ஹூஸ்டன் எம்.ஹெச். 17 விசாரணைக் குழுவில் உள்ளார்.

எம்,ஹெச். 370
மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370-ஐ இதுவரை கண்டுபிடித்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications