பாகிஸ்தான் வாழ்த்தாவிட்டால் என்ன வருங்கால பாக். 'விண்வெளி வீராங்கனை' பாராட்டியிருக்கார் பாருங்க!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் மங்கள்ன்யான் வெற்றியை பல உலக நாடுகள் வாழ்த்தியுள்ள போதிலும் இதுவரை பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை அடையக் காத்திருக்கும் நமீரா சலீம் என்பவர் இந்தியாவை வாழ்த்தியுள்ளார்.
மங்கள்யானின் வெற்றி, பிராந்தியத்தின் வெற்றி என்று அவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
முதல் முயற்சியிலேயே மங்கள்யான் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும் நமீரா கூறியுள்ளார்.

ஒரு சாட்டிலைட் கூட இல்லாத பாகிஸ்தான்
பாகிஸ்தான் 1961ம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஒரு செயற்கைக் கோளைக் கூட அது ஏவியதில்லை.

முதல் விண்வெளி வீராங்கனை
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் நமீரா சலீம், விரைவில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை அடையப் போகிறார். விண்வெளிப் பயணத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.

2015ல் விண்வெளிப் பயணம்
2015ம் ஆண்டு அமெரிக்கவின் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் காலக்டைஸ் விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நமீரா.

இந்தியாவுக்குப் பாராட்டு
நமீரா தற்போது இந்தியாவின் மங்கள்யான் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் சாதனை இப்பிராந்தியத்தை பெருமைப்படுத்தியுள்ளது.

தெற்காசியாவுக்கு பெருமை
மேலும் தெற்காசியாவுக்கே இது பெரும் ஊக்கத்தைக் கொடுப்பதாக அமையும்.

இஸ்ரோவைப் பாராட்டுகிறேன்
இஸ்ரோவையும், அதன் விஞ்ஞானிகளையும், ஆய்வாளர்களையும் நான் பாராட்டுகிறேன். மேலும் குறைந்த செலவில் இதைச் சாதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் நமீரா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications