லண்டன் மெட்ரோ ரயில் பாதையில் குண்டு வெடிப்பு? பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
லண்டன்: லண்டன் டவர் ஹில் சுரங்க ரயில் பாதையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனின் பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் கடந்த 15ம் தேதி பயங்கர சப்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதலில், 29 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று லண்டன் டவர் ஹில் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், நெருப்பு பற்றி எரிவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இருப்பினும் இது வெடிகுண்டு அல்ல எனவும், செல்போன் சார்ஜர் தீப்பிடித்து எரிந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications