ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்!
தெஹ்ரான்: ஈரான் எல்லைக்குள் வைத்து இன்று இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இதில் F-35 விமானத்தின் விமானி உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் F-15E ரக விமானத்திலிருந்து தப்பித்த 2 பேரில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஆயுத அமைப்புகள் அதிகாரி (WSO) இருவரும் ஈரானிய வான்பரப்பில் தங்கள் இருக்கைகளில் இருந்து வெளியேறினர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டார். ஆனால், மற்றொருவரின் நிலை குறித்த தகவல்கள் குழப்பமாக உள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, F-15E ஸ்ட்ரைக் ஈகிள் வகை போர் விமானத்தில் இருந்த இரு நபர்களில் ஒருவர் மீட்கப்பட்டு, தெற்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இருப்பினும், இரண்டாவது நபர் குறித்து பல்வேறு ஊடக அறிக்கைகள் மாறுபட்ட தகவல்களை வெளியிடுகின்றன. ஒரு சிலர் அவர் ஈரானியப் படைகளின் பிடியில் இருப்பதாகக் கூறுகின்றனர், மற்றவர்கள் அவருக்கான தேடுதல் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கின்றன.
ஈரான் அடைவதற்கு முன், உயிருடன் இருப்பவர்களை மீட்க அமெரிக்கப் படைகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செய்தி வலைத்தளமான ஆக்சியோஸ், இந்த விமானத்தில் இரண்டு நபர்கள் இருந்ததாக ஆதாரங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
முன்புற இருக்கையில் விமானியும், பின் இருக்கையில் ஆயுத அமைப்புகள் அதிகாரியும் என இருவர் F-15E விமானத்தில் இருந்துள்ளனர். அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் பணியாளர்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து தப்பிய இருவரில் ஒருவரை, அமெரிக்கப் படைகள் ஈரானியப் பிரதேசத்திற்குள் நுழைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்கான கூறியிருக்கிறது.
இருப்பினும், தேடப்பட்டு வரும் நபர் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த போர் விமானம் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) இன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications