தாயை பற்றி பேசியபோது கண்ணீர் சிந்திய மோடி.. பேஸ்புக் தலைமை அலுவலகமே நிசப்தமானது
சிலிக்கான்வேலி: பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பெற்றோர் குறித்து பேசிய மோடி குரல் தழுதழுத்தது. அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது.
டவுன்ஹாலில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பர்க், மோடியிடம் அவரது பெற்றோரின் பங்களிப்பு குறித்து ஒரு கேள்வி கேட்டார்.

அப்போது மோடி கூறியதாவது: டீ விற்பனை செய்த நான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக வந்ததை நம்புவது என்பதே கடினமானது. இதற்காக 125 கோடி இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்துவந்தவன். எனது வளர்ச்சிக்காக எனது தாய் பல தியாகங்கள் செய்தார். ஒரு மனிதன் வாழ்க்கையில், பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவர்கள்.
ஒரு தாய் எப்போதுமே தனக்கு என்ன வேண்டும் என்று நினைத்து பார்க்க மாட்டார். தனது பிள்ளை எப்படி வர வேண்டும் என்பதைத்தான் நினைத்து பார்ப்பார்.

எனது பெற்றோர் கிடைத்தவேலையை செய்து என்னை வளர்த்தனர். எனது தாய் கல்வியறிவு இல்லாதவர். இன்று நான் இங்கு பேசுவதையும் டிவி மூலம் பார்த்து, பிறர் சொல்வதை வைத்துதான் அவரால் என்ன நடக்கிறது என்பதை, அறிந்துகொள்ள முடியும்.
பக்கத்து வீட்டுக்கு சென்றுதான் எனது தாய் சமையல் செய்து எங்களுக்கு சாப்பாடு கொண்டுவருவார். தண்ணீருக்காக நெடுந்தூரம் சென்று சேகரித்து வருவார். (இவ்வாறு மோடி பேசியபோது, அவரது நா தழுதழுத்தது. அவரது கண்களில் லேசான கண்ணீர் எட்டிப்பார்த்தது. வலிமையான பிரதமராக அறியப்படும், மோடி, தாயை பற்றி பேசியபோது முழுமையாக உடைந்துவிட்டார். அப்போது, டவுன்ஹாலில் குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது)
இதன்பிறகு மோடி பேசுகையில், "மோடியின் பெற்ரோர் மட்டுமல்ல, இந்தியாவில் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தங்கள் கனவுகளை தியாகம் செய்துள்ளனர்" என்றார்.
நிகழ்ச்சி முடியும்போது, பேஸ்புக் தலைவர் மார்க்கை பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் பெருமைப்பட வேண்டும். அவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று மோடி கேட்டுக்கொண்டார். எனவே கூட்டத்தார் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications