ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ஃபாலுஜா நகரை மீட்டது ஈராக்
பாக்தாத்: ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான ஃபாலுஜா நகரை ஈராக் படையினர் மீட்டு உள்ளதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிவித்துள்ளார்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான ஃபாலுஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளனர். ஃபாலுஜா நகரின் முக்கிய மருத்துவனை ஒன்றின் வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈராக் படைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஃபாலுஜா நகரை தற்போது பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும், ஐ.எஸ். அமைப்பினரின் பிடியிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் ஈராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராணுவ அதிகாரி ஒருவர், பல வாரச் சண்டைக்கு பிறகு ஃபாலுஜா நகருக்கான போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, ஃபாலுஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications