தந்தையர் தினம்: இந்த போட்டோவுக்கு பின்னால் இருக்கும் கதையை கேட்டால் அழுதுடுவீங்க!
நியூயார்க்: தந்தையர் தினம் நெருங்கும் வேளையில் ஃபேஸ்புக்கில் கண்ணில்பட்ட இந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஹெக்டர்(25). அவரது வருங்கால மனைவி கேத்ரின். ஹெக்டருக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். கேத்ரின் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் குழந்தை பிறக்கும் சமயத்தில் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
அவர்கள் ஒரு முடிவு எடுக்க நண்பன் என்ற பெயரில் அவர்கள் வாழ்வில் வந்த துரோகியால் அனைத்துமே மாறிவிட்டது.

மரணம்
ஹெக்டர் எப்பொழுது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றாலும் பாதுகாப்புக்காக ஹெல்மெட், கிளவுஸ், ரைடிங் ஜாக்கெட், பூட் உள்ளிட்டவற்றை அணிவது வழக்கம். இந்நிலையில் நண்பன் என நினைத்த ஒரு துரோகி ஹெக்டரை கொலை செய்துவிட்டார்.

குழந்தை ஆப்ரி
கேத்ரினுக்கு குழந்தை பிறக்க ஒரு மாதம் இருக்கையில் ஹெக்டர் கொலை செய்யப்பட்டார். கேத்ரினுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஆப்ரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்
ஆப்ரியால் தனது தந்தையை பார்க்க முடியாது. இந்நிலையில் ஹெக்டருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆப்ரியை வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. ஹெக்டருக்கு மிகவும் பிடித்த கிளவுஸில் ஆப்ரி தலையை வைத்து சிரித்தபடி தூங்குவதை பார்ப்பவர்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த புகைப்படத்தை எடுத்த கலைஞர் அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தந்தை
ஒரு வேளை குழந்தை ஆப்ரி தனது தந்தையின் கிளவுஸில் தலை வைக்கையில் ஹெக்டர் தேவதையாக வந்து முத்தமிட்டாரோ அதனால் தான் அது சிரிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கேத்ரின்
ஆப்ரேயின் தாய் கேத்ரினின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள புகைப்பட கலைஞர் கிம் ஸ்டோன். புகைப்படத்தை பார்க்கையில் நெஞ்சை பிசைகிறது என்று பலர் தெரிவித்துள்ளனர். (எங்களுக்கும் தான்).












Click it and Unblock the Notifications