கேமரா முன் தேற்றிய பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. கண்டுக்காமல் திரும்பிய எம்பாபே.. இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

டோஹா: நேற்று ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டிக்கு பின்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் செய்த செயல் ஒன்றுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

2023 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடந்து முடிந்துள்ளது. அதிலும் நேற்று நடந்த இறுதிப்போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக மாறி உள்ளது.

கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க.. 30 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் கொடுத்து.. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.

பெனால்டி

பெனால்டி

பெனால்டியில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட, பிரான்ஸ் 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் அர்ஜெடினா அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மெஸ்ஸி 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அதாவது மரடோனா தலைமையில் கடைசியில் அர்ஜென்டினா கோப்பையை வென்ற அதே வருடம்தான் மெஸ்ஸி பிறந்தார். இப்போது அவர் தனது கடைசி கால்பந்து தொடரில் தந்து நாட்டிற்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து உள்ளார்.

 அர்ஜென்டினா

அர்ஜென்டினா

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிரான்ஸ் அணி இளம் வீரர் எம்பாபே ஆட்டத்தை உலகமே கொண்டாடி வருகிறது. இந்த தொடரில் அதிக கோல் அடித்த வீரர் இவர்தான். நேற்று தனது பிரான்ஸ் அணிக்காக கடைசி பெனால்டி சூட் சேர்த்து இவர் 4 கோல் அடித்தார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பிரான்ஸ் அணியின் மோசமான முதல் பாதியில் இருந்து, அந்த அணியை இரண்டாம் பாதியில் மீட்டு வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றதே எம்பாபேதான். இரண்டாம் பாதியில் 80 நிமிடங்களுக்கு பின் இவர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்ததுதான் ஆட்டத்தில் தீர்ப்பு முனையே.

2 கோல்கள்

2 கோல்கள்

அதுவரை அர்ஜெடினா இரண்டு கோல்களில் முன்னிலை வகித்த நிலையில் பிரான்ஸ் அணியை மீண்டும் மெயின் சீட்டில் அமர வைத்தார் எம்பாபே. அதன்பின் கூடுதல் டைமில் அர்ஜென்டினா கூடுதலாக ஒரு கோல் போட, மீண்டும் எம்பாபே ஹாட் டிரிக் கோல் போட்டு ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைமிலும் சமன் செய்தார். அதன்பின் பெனால்டி சூட் அவுட்டிலும் கூட எம்பாபேதான் கோல் போட்டார். தனது அணியை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இவர் நேற்று படாதபாடு பட்டார். ஆனால் most deserving wins the game என்று சொல்வது போல.. அதிக தகுதி படைத்த அணியான அர்ஜென்டினா வென்றது.

எம்பாமே

எம்பாமே

ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் போன்ற பெரும் ஜாம்பவான்கள் இனி இருக்க மாட்டார்கள் என்பதால்.. உலகின் தனிப்பெரும் ஜாம்பவான் வீரராக எம்பாமே உருவெடுக்கும் புதிய இன்னிங்க்ஸும் தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க பல ரசிகர்களையும், பல புதிய கால்பந்து ரசிகர்களையும் எம்பாபே உருவாக்கி இருக்கிறார். நேற்று இவர் ஆட்டத்திற்கு பின்பாக சோகமாக மைதானத்தில் அமர்ந்து இருக்கையில் பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரூன் இவரை அருகே வந்து தேற்றினார். ஆனால் அது ஏனோ பார்க்க photo -op போல அமைந்து இருந்தது. அதாவது கேமராவிற்காக அதிபர் அப்படி செய்தது போல தோன்றியது.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை

இதை பலரும் விமர்சனமும் செய்து இருந்தது. தன்னிடம் அடிக்கடி அருகே வந்து கேமரா கவனத்தை தன் பக்கம் திருப்ப கேமரூன் முயன்றதை எம்பாபே உணர்ந்து கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. நேற்று அதிபர் கேமரூனை எம்பாபே கண்டுகொள்ளவே இல்லை. அவர் தன்னை வந்து தேற்றிய போது கூட எம்பாபே எதுவும் சொல்லாமல் அப்படியே ஒதுங்கி அமைதியாக, கண்டுகொள்ளாமல் நின்றார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றது. கோலி டேஸ்சாம்ப்சும் அதிபர் கேமரூனை கண்டுகொள்ளாமல் இருந்ததால், பலரும் கேமரூனை இது எல்லாம் தேவையா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+