வெனிசூலா சிறையில் பயங்கர தீ விபத்து: 8 பெண்கள் உட்பட 17 கைதிகள் கருகி பலி
காரகஸ்: வெனிசுலா நாட்டு சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெனிசூலாவின் வடக்குப் பகுதியில் காரபோபா மாநிலத்தில் உள்ளது டோகுயிட்டோ சிறைச்சாலை. நேற்று அதிகாலை இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கைதிகள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள்.
மேலும் இந்த தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெனிசுலா நாட்டு சிறைகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே, அடிக்கடி அங்கு இது போன்ற கைதிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சிறைச்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை வெனிசுலா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications