வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி.. சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அசத்திய டிரம்ப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மனைவி மெலினாவுடன் வெள்ளை மாளிகையின் வாயிலுக்கு வந்து, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.

First Lady Melania Trump and Donald Trump receive PM Modi

தொடர்ந்து அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி வெள்ளை மாளிகை அமைச்சரவை அரங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பின்னர் பிரதமர் மோடிக்கு டிரம்ப் விருந்தளிக்க உள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இருவரும் தொலைபேசியில் மட்டும் இரண்டு முறை பேசியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US President Donald Trump and First Lady Melania Trump welcomed Prime Minister Narendra Modi at the White House on Monday
Please Wait while comments are loading...