விண்கல் மழை ஓகே.. அதென்ன மீன் மழை? ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து கிடைத்த மீன்கள்.. ஆச்சரியம்

இவ்வாறு பெய்த மழையில் இருந்த மீன்கள் அனைத்தும் உயிருடன் இருந்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்திருக்கிற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மழையாக பெய்த மீன்கள் அனைத்தும் உயிருடன் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

மழை, ஐஸ் கட்டி மழை, விண்கல் மழை, பனி மழை என பல மழைகளை நாம் பார்த்திருப்போம். இத்தனையும் எரிமலை அருகில் நின்றால் நெருப்பு மழையை கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால், மீன் மழையை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் மக்களே ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வறண்ட பகுதியில் இந்த மழை பொழிந்திருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த பகுதிக்கு அருகில் கடல் இருந்தாலும், வானத்திலிருந்து பொழிந்த மீன்கள் அனைத்தும் நன்னீர் மீன்கள் ஆகும்.

வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள லாஜாமானு நகரில்தான் இந்த மீன் மழை பொழிந்துள்ளது. இது குறித்து உள்ளூர்வாசியான ஜான்சன் ஜப்பானங்கா கூறுகையில், "கடந்த 2 தினங்களாக நாங்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துக்கொண்டே இருந்தது. இந்த பகுதி ஒரு வறட்சி பூமி. எனவே இங்கு மழை பொழிவது என்பது அரிதானது. இப்படி இருக்கையில் இரண்டு நாட்கள் மழை பொழிவு புயலின் அறிகுறியாக தெரிந்தது.

புயல்

புயல்

எதிர்பார்த்ததைப்போலவே புயல் உருவாகி எங்கள் நிலப்பரப்பை நோக்கி வந்தது. இதனால் எங்களின் அன்றாட வேலை பாதிக்கப்பட்டது. வேலையை இழந்து வருமானத்தை இழந்த நாங்கள் எப்போதுதான் மழை விடும் என வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். இப்படி இருக்கையில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. அதாவது புயல் எங்களை தாக்கிய நிலையில் கடுமையான மழை பெய்தது. எல்லோரும் வீட்டில் பதுங்கியிருந்தோம். ஆனால், இயல்புக்கு மாறாக சத்தம் வந்தது. யாரோ கல்லைக்கொண்டு வீட்டின் கூரைகளை தாக்குவது போல அந்த சத்தம் இருந்தது.

மீன்கள்

மீன்கள்

வெளியில் எட்டி பார்த்த எங்களுக்கு ரோட்டில் ஏதோ அசைவது போல இருந்தது. உற்று பார்த்த பின்னர்தான் அது மீன்கள் என்று தெரிந்தது. ஆம் அது மீன்கள்தான். தொடர்ந்து வானத்திலிருந்து பொழிந்துகொண்டே இருந்தது. அதுவும் உயிருடன் உள்ள மீன்கள். சிறிது நேரத்தில் மழை நின்ற பின்னர் நாங்கள் வெளியில் வந்து பார்த்தோம், வீதி முழுக்க மீன்களால் நிரம்பியிருந்தது. குழந்தைகள் அதனை சமைக்கும் பாத்திரத்தில் எடுத்து சேகரித்துக்கொண்டிருந்தனர். இது வெளியிலிருந்து பார்ப்பதற்கு இது விநோதமாக தெரிந்தாலும் இது போல ஏற்கெனவே பல முறை நடந்திருக்கிறது.

 இதற்கு முன்னர்

இதற்கு முன்னர்


இதே பகுதியில் கடந்த 2010, அதற்கு முன்னர் 2004 மற்றும் 1974ம் ஆண்டுகளில் இதுபோல மீன் மழை பொழிந்திருக்கிறது. ஆனால் இதனை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அற்புதமாக இருக்கும். மீன் மழை என்பது கடவுளின் ஆசீர்வாதம்" என்று கூறியுள்ளார். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "கடலிலிருந்து நீர் திடீரென ஒரேயடியாக வானத்திற்கு செல்லும். அதாவது புயல் காலங்களில் நீர் பரப்பின் மேல் அழுத்தம் குறைவாக இருக்கும்போது நீர் மேலே இழுக்கப்படும். இவ்வாறு இழுக்கப்படும் நீரில் மீன்களும் வானத்திற்கு செல்லும், பின்னர் இது திடீரென மற்றொரு இடத்தில் மழையாக பெய்யும்.

காரணம்

காரணம்

அப்போது இந்த மீன்களும் மழையாக பொழியும். மீன்கள் மட்டுமல்லாது தவளையும் சில நேரத்தில் மழையாக பொழிவதுண்டு. இந்த மழையில் சிறி மீன்கள் மட்டுமே இருக்கும். நீர் வானத்தில் இருக்கும் போது மீன் உயிருடன் இருக்கும். எனவே மழையின் போதும் மீன்கள் உயிருடன் இருக்கும். தற்போதைய நிகழ்வில் ஆச்சரியம் என்னவெனில், இந்த மழையில் பெய்த மீன்கள் அனைத்தும் நன்னீர் மீன்களாகும். ஆனால் இப்பகுதியில் கடல்தான் பிரதானமாக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+