இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை !
கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இலங்கையில் உள்ள ஊர்க்காவல், பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பரிந்துரையை ஏற்று மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகளுடன் ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவர்கள் நாளை தமிழகம் வருவார்கள் வந்து சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை திரிகோணமலை மற்றும் மன்னார் சிறைகளில் உள்ள 51 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications