மீன்களுக்கு மது கொடுத்தால் என்னாகும்?: ஒரு சுவாரஸ்யமான ஆய்வு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: மீன்களுக்கு மது கொடுத்தால் அவை வேகமாக நீந்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் மது அருந்தினால் அவர்கள் தள்ளாடினாலும், யாராவது பிடித்தால் திமிறுவது உண்டு. இந்த நிலை மீன்களுக்கும் பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது.

நியூயார்க் பாலிடெக்னிக் ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங்கை சேர்ந்த விஞ்ஞானிகள் மீன்களை வைத்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்கள் மீன்களில் வரிக்குதிரை மீன் வகையை தங்கள் ஆராய்ச்சிக்கு தேர்வு செய்தனர். அவர்கள் வரிக்குதிரை மீன் ஒன்றுக்கு மது கொடுத்து அதை தண்ணீரில் விட்டனர். மது அருந்திய பிறகு அந்த மீன் வழக்கத்தை விட வேகமாக நீந்தியது.
அதை பார்த்த பிற மீன்களும் வேகமாக நீந்தின. இந்த ஆய்வு மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை கண்டறியலாம் என்ற விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications