சீனா: சுற்றுலா தளத்தில் தாறுமாறாக ஓடிய மர்மக் கார் மோதி 5 பேர் பலி: 38 பேர் காயம்
பெய்ஜிங்: சீனாவில் சுற்றுலாத்தளத்தில் தாறுமாறாக ஓடிய மர்ம கார் மோதியதில் 5 பேர் பரிதாமபாகப் பலியானார்கள்.
கடந்த 1989ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை ராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த புரட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் சீன தலைநகர் பீஜிங்கில் போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த இடம் ‘டியனன்மென் சதுக்கம்' என்ற பெயரில் நினைவுச் சின்னமாகி, சுற்றுலாத் தளமாக கருதபப்டுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மறைந்த மாவோ ஜெடாங்கின் சமாதியும் அவரது பிரமாண்ட சித்திரமும் வரையப்பட்டுள்ள இந்த இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ள இங்கு, நேற்று படுவேகமாக வந்த ஒரு மர்ம கார் ஒன்று சுற்றுலா மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. பின்னர், தடுப்பு சுவற்றில் மோதி திடீரென தீப்பிடித்து எரிந்தது கார். இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், படுகாயமடைந்த 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications