விண்வெளியில் தீவைத்து விளையாடப் போகும் நாசா!
வாஷிங்டன்: ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் தீ எவ்வாறு எரிகிறது என்பதைச் சோதிக்கும் முயற்சியாக விண்வெளியில் தீ மூட்டி ஆராய்ச்சி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
விண்வெளி மற்றும் அதன் மர்மங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாசாவின் ஜான் ஹெச் கிளென் ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் தீயை மூட்டி புதிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

தீ ஆராய்ச்சி...
இந்த ஆய்வுக்கு விண்கலம் தீ ஆராய்ச்சி (Spacecraft Fire Experiment) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுருக்கமாக இது சஃபைர் எனக் குறிப்பிடப்படுகிறது.

தனித்தனி விண்கலங்கள்...
இதற்கென பிரத்யேகமாக விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன. அவற்றிற்கு சஃபையர் 1, 2 & 3 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்தாண்டே அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

பொருட்கள் கொண்டு செல்லும்...
அடுத்தடுத்து இவை விண்வெளிக்க அனுப்பப்படும். இவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குத்தேவையான பொருட்கள் சாதனங்களைக் கொண்டு போய் அங்கு கொடுத்த பின்னர் தீவைக்கும் ஆய்வு நடத்தப்படும்.

தொலைவில்...
ஆனால், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அருகில் இந்த சோதனை நடத்தப்படாது. அங்கிருந்து வெகு தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த நெருப்பு சோதனை நடத்தப்படும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸிஜன் அளவு மூலம்...
பஞ்சு மற்றும் பைபர் கிளாஸ் கலந்த கலவையை நெருப்பு மூட்டி இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் டேட்டாக்களை நாசா ஆய்வு செய்யும். தீ எரியும்போது எவ்வளவு ஆக்சிஸன் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications