வரலாற்றில் முதல் முறையாக ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் நாளை சந்திப்பு
மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும், ஏவுகணை சோதனைகளை கைவிடுமாறு, அமெரிக்கா நாடு எச்சரிக்கை விடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூளும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்ட்டதை தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.
பின்னர், 2 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்த நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் நாளை ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷிய அதிபரின், கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்திக்க உள்ளதால், உலக நாடுகள் உற்று நோக்கி கவனித்து வருகின்றன. இந்த சந்திப்பில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.












Click it and Unblock the Notifications