கென்யாவில் வெடித்த போராட்டம்.. பாதுகாப்பாக இருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
நைரோபி: கென்யாவில் வரி உயர்வை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் '7 டேஸ் ஆஃப் ரேஜ்' போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக வெடித்திருக்கிறது. குறிப்பாக நேற்று கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் தாக்குதல் சம்பவம் அந்நாட்டு மக்கள் இடையே மேலும் கோபத்தை தூண்டியிருக்கிறது. எனவே போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. அனத்து துறை சார்ந்தவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் கென்யாவில் உச்சப்பட்ச பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. “கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தூதரகம் கூறியிருக்கிறது.
அதேபோல, அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை பெற அங்குள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரகத்தின் வலைதளம், சமூக வலைதள பதிவுகளை ஃபாலோ செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. தூதரகத்தின் தரவுகளின்படி சுமார் இருபதாயிரம் இந்தியர்கள் கென்யாவில் சிக்கியுள்ளனர்.
தற்போது அங்கு நடந்து வரும் போராட்டங்கள் மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் தொடுத்த அடக்குமுறையில் பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.
“ஐநா பொதுச்செயலாளர் வெளிப்படையாக இந்த போராட்டங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்" என்று அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications