கடும் வறட்சி, பசி.. யானைகளை கொன்று சாப்பிட வனத்துறை ஒப்புதல்.. ஜிம்பாப்வே அதிர்ச்சி
விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வசித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நமீபியா, மலாவி, சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காலநிலை மாற்றமான எல் நினோவால் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 83 யானைகள் உள்ளிட்ட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் தற்போது மிகவும் அவசியம் என்று ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமீபியா சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வறட்சி என்பது எப்போதும் நிலவும் ஒரு விஷயமாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2018 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல, தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின்கீழ் ஆய்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சுமார் 30 லட்சம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நமீபியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக யானைகள் தவிர 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள், 100 எலாண்ட்ஸ் மான் வகை ஆகியவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், நமீபியாவைத் தொடர்ந்து கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளின் இறைச்சியை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஜிம்பாப்வேயும் திட்டமிட்டுள்ளது
ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினோஷே ஃபராவோ கூறுகையில், உணவுக்காக தேவைப்படுபவர்கள் யானைகளை வேட்டையாடி கொள்ளலாம் என்றும், அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தரப்பிலும் மக்களுக்கு விலங்குகளின் இறைச்சி வழங்கப்படும். இத்திட்டத்தை மனித விலங்கு மோதல் அதிகம் ஏற்படும் ஆப்பிரிக்க நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளில் செயல்படுத்த திட்டம் உள்ளது.
அதிகரிக்கும் வெப்பம், நீர், உணவு தட்டுப்பாடு காரணமாக விலங்குகளை வேட்டையாடுவதற்கான அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகள் வாழ்வதற்கான போதுமான இடமும் இல்லை. ஹ்வாங்கே பகுதியில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் 15 ஆயிரம் யானைகள் மட்டுமே வசிப்பதற்கான வனப் பரப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications