அப்பாவாக போவதால் தொழிலை விட்ட கேங்ஸ்டர்.. துரத்தி துரத்தி சுட்டுக் கொன்ற முன்னாள் நண்பர்கள்!
டென்மார்க்கின் நம்பர் 1 கேங்ஸ்டர் என்று அழைக்கப்படும் நெதிம் யாசர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கோபன்ஹேகன்: டென்மார்க்கின் நம்பர் 1 கேங்ஸ்டர் என்று அழைக்கப்படும் நெதிம் யாசர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த நெதிம் யாசர், அந்நாட்டில் ரவுடிகளின் காட் பாதர் என்று அழைக்கப்பட்டவர். 31 வயதில் அந்நாட்டின் நிழல் உலக தாதாக்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.
25 வருடம் முன் சிறு வயதில் துருக்கியில் இருந்து டென்மார்க் வந்தார் நெதிம் யாசர். இந்த நிலையில் அவர் தனது கேங்ஸ்டர் தொழிலைவிட்டுவிட்டு போக முடிவெடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெரிய கேங்ஸ்டர்
14 வயதில் நெதிம் யாசர் ரவுடியாக மாறியுள்ளான். டென்மார்க்கில் ரவுடி கலாச்சாரம் இப்போது அதிகம். நெதிம் யாசரை பார்த்து தொழிலை தொடங்கிய நபர்கள் பலர் இருக்கிறார்கள். போதை பொருள், ஆயுதம், கடத்தல், கொள்ளை என்று நிறைய மோசமான வேலைகளை பார்த்து வந்துள்ளார் நெதிம் யாசர்.

நம்பர் ஒன்னாக மாறினார்
இவர்தான் டென்மார்க்கின் நம்பர் 1 கேங்ஸ்டர் என்று கூறப்படுகிறது. அரசுக்கும் கூட அவ்வப்போது தேவையான பணிகளை இவர் செய்து கொடுத்துள்ளார். இவரை ஏற்கனவே சில முறை எதிரணி ரவுடிகள் கொலை செய்ய பார்த்து இருக்கிறார்கள். ஹாலிவுட் கிளாசிக் படமான காட் பாதர் படத்தில் வருவதை போலத்தான் இவர் கெத்தாக வலம் வந்துள்ளார்

குழந்தை பிறப்பதாக இருந்தது
இந்த நிலையில் இவரது மனைவி இவரை பல வருடமாக தொழிலை விட்டுவிட கூறியுள்ளார். இதை கேட்காமல் இருந்த நெதிம் யாசர் கடந்த வாரம் தொழிலை விட்டுவிட முடிவெடுத்துள்ளார். அவரது மனைவி கர்ப்பமாக இருந்ததால் தன்னுடைய தொழிலை விட்டுவிட இவர் திட்டமிட்டு இருந்தார்.

புத்தகம் எழுதினார்
5 நாட்களுக்கு முன் தன்னுடைய கேங்ஸ்டர் தொழிலைவிட்டுவிட்டு அதை பற்றி புத்தகம் எழுதியுள்ளார். வேர்கள் (roots) என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகம் இரண்டே நாட்களில் டென்மார்க் முழுக்க ஹிட் அடித்துள்ளது. தான் எப்படி கேங்ஸ்டர் ஆனேன், எப்படி நம்பர் 1 இடம் பிடித்தேன், எப்படி வெளியே வந்தேன் என்று இவர் எழுதி இருக்கிறார்.

கொலை செய்தனர்
இந்த நிலையில் நேற்று நெதிம் யாசர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவர் தொழிலை விட்ட கோபத்தில் இவருடன் வேலை பார்த்த இவரின் முன்னாள் நெருங்கிய நண்பர்களே கொலை செய்து இருக்கிறார்கள். கோபன்ஹேகன் நகரத்தின் தெரு ஒன்றில் ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். இவர் தொழிலை விட்டதால் ஏற்பட்ட இழப்பு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications