'இன்போசிஸ் குட்டை உடைத்தவர்' இழப்பீடு கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
அலபாமா: அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தன்னை தவறாக பணிநீக்கம் செய்ததற்கு இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் அமெரிக்கரான ஜாக் பாமர். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் நியூ ஜெர்சியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இன்போசில் நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை தவறாக பணிநீக்கம் செய்ததாகவும், அதற்கான இழப்பீட்டை இன்போசிஸ் தனக்கு வழங்க வேண்டும் எனவும் ஜாக் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்க்கிறார் என்பதை தனது மனுவில் குறிப்பிடவில்லை.
இதே ஜாக் பாமர் தான் இன்போசிஸ் தனது ஊழியர்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க விசா விதிகளை மீறியதாக தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா இன்போசிஸின் விதிமீறல் குறித்து விசாரணை நடத்த துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜாக் கடந்த 2012ம் ஆண்டிலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் அவரது வழக்கு தள்ளுபடியானது.












Click it and Unblock the Notifications