ஒரு குழந்தை கூட காசாவில் இருக்க கூடாது..இரக்கமின்றி பேசும் இஸ்ரேல்! இப்படி கொடூரத்தை பார்த்ததில்லை!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: காஸா மீது இஸ்ரேல் மீண்டும் போர் தொடுத்திருக்கும் நிலையில் அங்கு பெண்கள் குழந்தைகள் என பல தரப்பினரும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் காசாவில் இருக்கும் குழந்தைகள் கூட எதிரிகள் தான், ஒரு குழந்தை கூட அங்கு இருக்கக் கூடாது என இஸ்ரேல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் பேசி இருப்பது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பிடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்தது.

அதற்கு பிறகு, ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வந்து நிலையில் பழைய கைதிகளை ஒப்படைப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

Israel Gaza war

2023 அக்டோபரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் உலக நாடுகளிடையே ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் பணய கைதிகளை ஒப்படைக்கவில்லை என கூறி ஹமாஸ் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தீவிர தாக்குதலின் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயரிழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாக்குதலில் 15000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மூன்றாவது வாரத்தில் போர் நிறுத்தம் தொடங்கியது. ஆனால், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த நிலையில், வடக்கு காசா, அல் ரஃபா, தெற்கு காசா ஆகிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் நிறுத்தம் இரண்டாவது முறையாக மீறப்பட்டு இருக்கும் நிலையில் காசாவை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

ஆனால் இதனை நிறுத்த வேண்டுமென இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வழக்கம்போல் அப்பாவி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காசாவின் குழந்தைகள் கூட எதிரிகள் தான் என இஸ்ரேலின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பேசி இருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பேசி உள்ள இஸ்ரேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோஷோ ஃப்க்லின், ஹமாஸ் மட்டும் நமது எதிரி அல்ல.. அவர்களின் ராணுவமும் நமக்கு எதிரி தான்.. சொல்லப்போனால் காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தை கூட நமக்கு எதிரிகள் தான். காசாவில் ஒரு குழந்தை கூட இருக்கக் கூடாது. நாம் காசாவை ஆக்கிரமித்து அங்கு குடி அமர வேண்டும். அதை தவிர வெற்றி என்றால் எதுவுமே இல்லை" என கூறி இருக்கிறார்.

அவரது பேச்சு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொழுதுபோக்கிற்காக இஸ்ரேல் காசாவின் குழந்தைகளை கூட கொல்கிறது என ஓய்வு பெற்ற ஐடிஎப் துணைத் தலைவர் கோலன் குற்றம் சாட்டினார். அதற்கு பிறகு தான் மோசோ இந்த கருத்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் காசா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் காசாவில் இதுவரை சுமார் 17,000 குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர் என பாலஸ்தீன கல்வி அமைச்சகம் கூறி இருக்கிறது. மேலும் சுமார் 14,000 குழந்தைகள் போரால் கொல்லப்படலாம் என ஐநா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+