இந்த விசயத்துல பாகிஸ்தானை விட இந்தியா பெஸ்ட் - முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்றாரு கேளுங்க
இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு நலனை விட தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டி அது ரத்து செய்யப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி
இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்
அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் விழுந்ததால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய பிரதமருக்கான தேர்தலில் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான் கான் பேச்சு
இந்த நிலையில் லாஹூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், இதுபோன்ற ஒரு கூட்டத்தை இதுவரை தான் கண்டதில்லை எனக் கூறினார். வெளிநாட்டு சதியால் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறிய அவர், புதிய தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட அரசை தங்களால் ஏற்க முடியாது என்றும், இந்த தவறை ஈடுகட்ட உடனடி தேர்தல் தேவை எனவும் பேசினார்.

இந்தியா குறித்து புகழாரம்
தனது உரையின்போது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை இம்ரான் கான் பாராட்டி பேசினார். "வெளிநாட்டு நலனுக்கு முன்னதாக இந்தியா தங்கள் நாட்டு மக்களின் நலன் குறித்தே முதலில் சிந்திக்கிறது. இந்தியாவில் ராஜாங்க ரீதியாக அமெரிக்காவுடன் கூட்டு வைத்துள்ளது. அதே நேரம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்கக்கூடாது என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டும், 'எங்கள் நாட்டின் நலனுக்காகவே முடிவெடுப்போம்' என இந்தியா சொல்கிறது.
Recommended Video

பாகிஸ்தானிலோ..
இந்தியாவின் வெளியுறவுக்கொளை அவர்கள் நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. ஆனால் பாகிஸ்தானிலோ பிற நாடுகளின் நலனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது எதிரிகளும் அதை விரும்பவில்லை. அவர்கள் நாம் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதையும் விரும்பவில்லை. அங்குதான் சந்தேகம் எழுகிறது என்றார்.
கடந்த 8 ஆம் தேதி பேசிய இம்ரான் கான், "எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது." என புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications