கொதிக்கும் தண்ணீரில் கோழியைப் போட்டு தோலை உரித்து கொடுமை.. 5 பண்ணை ஊழியர்கள் கைது
சிகாகோ: அமெரிக்காவில் உள்ள பண்ணை ஒன்றில் கோழி மற்றும் அதன் குஞ்சுகளைத் துன்புறுத்தியதாக 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
பாஸ்டர் பண்ணைகள் எல்.எல்.சி. என்பது அமெரிக்காவில் உள்ள முக்கிய கோழி பண்ணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கலிபோர்னியா மற்றும் ப்ரெஸ்நோ பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில், கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகளை அங்குள்ள ஊழியர்கள் துன்புறுத்துவதாக புகார் எழுந்தது.

மேலும், அங்குள்ள கோழிகள் இறைச்சிக்காக உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்டு அதன் இறக்கைகள் உரிக்கப் படுவதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு ஒன்று ஊழியர்கள் கோழிகளை மற்றும் அதன் குஞ்சுகளை துன்புறுத்துவதை ரகசியமாக படம் பிடித்தது.
இதனை அடுத்து குறிப்பிட்ட பண்ணைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 ஊழியர்களை பாஸ்டர் பண்ணை நிறுவனம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications