பிரான்ஸ் அதிபருடன் தொடர்பு: செய்தி வெளியிட்ட பத்திரிக்கை மீது நடிகை மானநஷ்ட வழக்கு
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான் கோயிஸ் ஹோரலந்துடன் தொடர்பு இருப்பதாக செய்தி செளியிட்ட பத்திரிக்கையின் மீது நடிகை ஜுலி கெயத்து மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹோலந்த் க்கும், பிரெஞ்ச் நடிகை ஜுலி கெயத்துக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கேள்விபட்ட அதிபர் ஹோலந்தின் காதலி வலேரி டிரயர்வெயிலர் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தன்னை பற்றி வெளியான செய்திக்கு அதிபர் ஹோலந்து கண்டனம் தெரிவித்தார்.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிதுள்ள நடிகை ஜுலி கெயத், அந்த பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், வழக்கிற்கான செலவு தொகையையும் பத்திரிக்கை நிறுவனம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications