2011ல் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ஆளானது இதே "சார்லி ஹெப்டோ" நாளிதழ் அலுவலகம்
பாரீஸ்: பாரீஸ் நகரில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான பிரெஞ்சு பத்திரிக்கையான சார்லி ஹெப்டோவின் அலுவலகம், ஏற்கனவே 2011ம் ஆண்டும் தாக்குதலுக்குள்ளனதாகும்.
சார்லி ஹெப்டோ பிரெஞ்சு நாளிதழின் தலைமை அலுவலகம் பாரீஸ் நகரில் இயங்கி வருகிறது. இன்று மதியம் அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த இரண்டு முகமூடி அணிந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

இருப்பினும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை.
இந்தப் பத்திரிகை நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் குறித்து கேலிச் சித்திரம் போட்டு சர்ச்சையில் சிக்கி வந்தது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடந்துள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் போட்டு சர்ச்சையில் சிக்கியது சார்லி ஹெப்டோ பத்திரிகை. டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்ட நபிகள் நாயகத்தின் கார்டூனை தான் சார்லி ஹெப்டோ வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது அந்த பத்திரிகை அலுவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications