மீண்டும் பற்றி எரியும் வங்கதேசம்.. நாடு முழுக்க வெடித்த வன்முறை.. இந்தியர்கள் நிலை என்ன? பரபர
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உயிரிழப்பு: இதனால் போராட்டம் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இன்று காலை வெடித்த இந்த வன்முறையில் சுமார் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதுவே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க வங்கதேச அரசு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இருப்பினும், அதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஊரடங்கு: போராட்டங்கள் கையைவிட்டுப் போய் இருக்கும் சூழலில், நிலைமையை சமாளிக்க அங்கே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், அதைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அங்கே இந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க போலீசார் இதுபோல மொத்தமாக ஊரடங்கை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
நிலைமை மோசம்: வங்கதேச தலைநகர் டாக்காவின் பல இடங்களைப் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அங்குப் பல முக்கிய இடங்களில் சிறுசிறு மோதல்களும் நடந்துள்ளன. மேலும், போராட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளனர்.. இந்த மாணவர் போராட்டத்திற்கு வங்கதேச எதிர்க்கட்சியின் ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், அங்கே போராட்டக்காரர்கள் ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. அங்கு பிரதமர் பதவி விலகும் வரை மக்கள் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் வரி செலுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அதையும் மீறி இன்று திறக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்தினர்.. மேலும், அங்கு சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை தேவை: அங்கே நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வங்கதேசத்திற்கான இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், "வங்கதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications