அதிர்ந்து கூட பேசாதவர்... அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் குறித்து நண்பர்கள் உருக்கம்
அமெரிக்க பாரில் இந்திய பொறியாளர் சுட்டுகொல்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க பாரில் இந்திய பொறியாளர் சுட்டுகொல்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் முடித்த அவர் யாரையும் அதிர்ந்து வட பேச மாட்டார் என அவரது நண்பர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கார்மின் விமான போக்குவரத்துத்துறை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஸ்ரீநிவாச குச்சிபோட்லா மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் அலோக் மடசனி காயங்களுடன் உயிர் தப்பினார்.
கன்சாஸ் நகரில் உள்ள ஒரு பாரில் ஸ்ரீநிவாசா குச்சிபோட்லா தனது நண்பருடன் மது அருந்தினார். அப்போது அங்கு வந்த ஆடம் புரின்டன் என்பவர் இருவரையும் இஸ்மியர்கள் என நினைத்து நாட்டை விட்டு வெளியேறு எனக்கூறி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஆடமை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் யுஜி, டெக்ஸாஸில் பிஜி
ஸ்ரீநிவாசா ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2005அம் ஆண்டு இளநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் டெக்ஸ்ஸ் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

படிக்கும்போதே ஆசிரியராக பணி
முதுநிலை பொறியியல் படிக்கும்போதே ஆசிரியராக பணிபுரிந்த அவர் ஆய்வு உதவியாளராகவும் இருந்தார்.முதுகலைப் பொறியியலில் சிறந்து விளங்கிய ஸ்ரீநிவாஸ் அமெரிக்காவின் ராக்வெல் காலின்ஸ் நிறுவனத்தால் பணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சீனியர் என்ஜினியராக கார்மின் விமானப் போக்குவரத்துத்துறையில் கடந்த 2014ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.

அதிர்ந்து கூட பேசாதவர்
படிக்கும் போதும் சரி அலுவலகத்திலும் சரி யாரையும் அதிர்ந்துக்கூட பேசாதவர் ஸ்ரீநிவாஸ் என அவரது நண்பர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்ரீநிவாஸ் கடந்த 2012ஆம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர் சுனயனா டுமாளா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கோ ஃபன்ட் மி-கணக்கு தொடக்கம்
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி செய்யவும் ஸ்ரீநிவாசுவின் நண்பர்கள் கோ ஃபன்ட் மி என்ற கணக்கை தொடங்கி நிதி சேகரித்து வருகின்றனர். காயமடைந்த அவரது நண்பர் அலோக் மடசனி ஹைதராபாத்தில் உள்ள வாசவி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர் என தெரிய வந்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications