பூமியை சூழும் இருண்ட காலம்! மனித குலத்தின் அழிவு ஆரம்பிக்கும்.. பாபா வாங்கா 2026 பகீர் கணிப்புகள்
ஒட்டாமன்: எதிர்காலம் குறித்துத் தெரிந்து கொள்ளப் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், சிலருக்கு மட்டுமே எதிர்காலம் குறித்த பார்வை இருக்கும். அப்படி எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் கொண்டவர் பாபா வாங்கா.. 2026ல் என்ன நடக்கும் என்பது குறித்து அவரது கணிப்புகள் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது!
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் பாபா வாங்கா.. இரட்டை கோபுர தாக்குதல், டயனா உயிரிழப்பு எனப் பல விஷயங்களை இவர் முன்கூட்டியே கணித்துள்ளார். 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அப்படி 2026க்கு இவர் விட்டு சென்ற கணிப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

மாபெரும் போர்
மாபெரும் போர்: 2026-ஆம் ஆண்டில் ஒரு பெரும் உலகப் போர் தொடங்கும் என அவர் கணித்துள்ளார். உலகின் முக்கிய வல்லரசுகள் இந்த போரில் ஈடுபடும் என்றும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் முழுவதும் பரவும் பாபா வாங்கா கணித்துள்ளார்
இயற்கைப் பேரழிவுகள்: அதேபோல பூமியில் ஒரு மாபெரும் இயற்கை பேரழிவு தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த பேரழிவால் பூமியின் 7-8 சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் என நிலைமை மோசமாக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.
ஏஐ ஆதிக்கம்
ஏஐ ஆதிக்கம்: ஏஐ இப்போது உலகின் பல்வேறு துறைகளிலும் நுழைய ஆரம்பித்துவிட்டது. 2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு வேறு புதிய எல்லைகளைத் தொடும் எனப் பாபா வாங்கா கணித்துள்ளார். முக்கிய முடிவுகள், தொழில் சார்ந்த முடிவுகளையும் கூட ஏஐ எடுக்க ஆரம்பிக்குமாம். மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என கணித்துள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு: மேலும், 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூமிக்குள் ஒரு பெரிய விண்கலம் நுழையக்கூடும் என்றும் மனிதர்கள் ஏலியன்கள் உடன் முதல் தொடர்பை ஏற்படுத்தப் போகிறார்கள் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
உலகமே மாறும்
ரஷ்யாவின் எழுச்சி: சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவின் சர்வதேச ஆதிக்கம் சரிந்து வந்தது. ஆனால், இந்த நிலை மாறும் என்பது போலவே பாபா வாங்கா கணிப்பு இருக்கிறது. 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து "உலகின் அதிபதி" என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் எனக் கணித்துள்ளார்.. இது ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் தொடங்கி வைக்கும்.
உலகப் பொருளாதார நெருக்கடி: 2026ல் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என அவர் கணித்துள்ளார். பல்வேறு நாடுகளின் கரன்சிகள் மதிப்பு சரியும், வங்கிகள் திவால் ஆகும் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
தங்கம் விலை
தங்கம் விலை: தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையிலும் எதிர்பாராத மாற்றம் வரும் என அவர் கணித்துள்ளார். இருப்பினும், இதை இரு வேறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஒரு தரப்பினர் தங்கத்தின் விலை கடுமையாகச் சரியும் என்கிறார்கள். மற்றொரு தரப்பினர் அது புதிய உச்சத்தைத் தொடும் என என்கிறார்கள்.
காலநிலை மாற்றம்: அதேபோல 2026ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் மிக மோசமாக இருக்கும் என அவர் கணித்துள்ளார். இதுவரை மனிதர்கள் காணாத அளவுக்கு வெள்ளம், வறட்சி தீவிர வானிலை ஏற்படும் என்றும். இந்த பேரழிவுகள் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
புவிசார் அரசியலில் மாற்றம்
புவிசார் அரசியலில் மாற்றம்: புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும் என்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என தெரிவித்தார். குறிப்பாகத் தைவான் மீது கட்டுப்பாடு அல்லது தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவது ஆகிய புவியியல் மாற்றம் நடக்கும் என அவர் கணித்துள்ளார்.
பெரிய மாற்றம்: மேலும், உலகில் மிகப் பெரியளவில் இடப்பெயர்வுகளும் சமூக மாற்றங்களும் அடுத்தாண்டு நடக்குமாம். தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடிகளால் அடுத்தாண்டு மிக பெரியளவில் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறுவார்கள். இதனால் கலவரம் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications