ஈரான் மட்டும் இழிச்சவாயனா? அந்நாட்டுக்கு மட்டும் அணு ஆயுத தயாரிப்புக்கு தடை ஏன்? பின்னணியில் ஜி 7?
டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்காவும், ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ஜி-7 நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஜி 7 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில் ஈரானுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பரபரப்பாக இருக்கிறது மத்திய கிழக்கு. நீண்ட காலமாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருக்கும் போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஈரானின் ஹிஸ்புல்லாக்கள், ஏமன் நாட்டின் ஹைதிக்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்ததாக கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சனிக்கிழமை முதல் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் சரமாரியாக ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலால் பதட்டமான நிலை நிலவுகிறது. முக்கியமான படைத் தளபதிகள், போராளி குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈரானின் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி பதுங்கு குழிக்குள் பதுங்கி இருக்கிறார்.
அவரை கண்டுபிடித்து விட்டதாகவும் அவர் சரணடைய வேண்டுமென அமெரிக்கா கூறி இருக்கிறது. ஆனால் கமேனி கொல்வது தான் தீர்வு என இஸ்ரேல் கூறி வருகிறது. இதற்கிடையே கனடாவில் ஜி 7 மாநாடு நடைபெற்ற நிலையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என அனைத்து நாடுகளும் ஒரே குரல் எழுப்பி உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அணு ஆயுதம் இருக்கும் இடையில் ஈரான் மட்டும் ஏன் தயாரிக்க கூடாது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏற்கனவே அணு ஆயுதத்தால் ஜப்பானில் பேரழிவு ஏற்பட்ட நிலையில், அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என 1968 ஆம் ஆண்டு அணு ஆயுத பரவலை தடுக்கும் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்கா, ரஷ்யாவில் நாடுகள் அணு ஆயுதங்களை தயார் செய்தனர். அதனால் பிற நாடுகள் அதில் இணைய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சீனாவை காரணம் காட்டி இந்தியாவும், இந்தியாவை காரணம் காட்டி, பாகிஸ்தானும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இஸ்ரேலும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் 5000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, இந்தியா பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா நாடுகளிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் ஈரான் மட்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்க கூடாது என சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1970களில் புதிய அணு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. அதன் காரணமாகவே அமெரிக்கா அணு ஆயுத செறிவுகளுக்கு உதவி செய்தது.
இந்த நிலையில் 1978 ஆம் ஆண்டு ஈரானில் புரட்சி ஏற்பட்ட பிறகு அமெரிக்கா ஈரானுக்கு உதவவில்லை. இதை அடுத்து ஈரான் அணுசக்தி திட்டங்களை உருவாக்கம் செய்தது. மேலும் மின் உற்பத்தி உள்ளிட்டவருக்காக பெறப்பட்ட அணுவை ஆயுதங்களாக மாற்றுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்க, பிரான்ஸ், ரஷ்யா நாடுகள் ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டன. அதில் கையெழுத்திட்டதால் அதன் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் 2018 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் பிறகு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக திரும்பியது. ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதாக குற்றம் சாட்டியது. மேலும் சர்வதேச அணு ஆயுத ஏஜென்சி நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டின.
அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அதனை மீறுவது தவறு எனவும், ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதால் அதன் கையில் அணு ஆயுதம் இருப்பது ஆபத்தானது என கருதப்படுகிறது. மேலும் இஸ்ரேல், சவுதி அரேபியாவிலும், ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல், சவுதி அரேபியா மத்திய கிழக்கு நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து வருகின்றன. அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றால் உலகம் பேரவை சந்திக்கும் என்பதால் தான் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பது நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக சொல்கின்றன அந்நாடுகள்.
-
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்! -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
ஈரான் போரால் ஐரோப்பாவுக்கு புது சிக்கல்.. 3 வாரம் தான் கெடு! -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications