துபாயில் கங்கை அமரன், நடிகர் தாமு கலக்கிய முத்தமிழ்ச் சங்க கலை விழா
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் கலை விழா மார்ச் மாதம் 21ம் தேதி மாலை 6 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ரஷீத் அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு திரு. மோகன் தலைமை ஏற்க திரு. ஷா வரவேற்புரை நிகழ்த்த திருமதி. பாரதி, திருமதி. நூர்ஜஹான், திருமதி. ஷர்மிளா, செல்வி ஷப்னம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இவ்விழாவை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் சுதா ஃபவுன்டேஷன் நிறுவனர் திரு. ராகவன் உருவாக்கிய புற்று நோய் விழிப்புணர்வு இணையதளத்தை இந்திய தூதரக துணை தூதர் திரு. அசோக் பாபு துவக்கி வைத்துப் பேசுகையில், இந்த இணையதளம் மூலம் உலகில் 15 ஆயிரம் மருத்துவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஞானசம்மந்தன்
விழாவின் சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. ஞானசம்மந்தன் கலந்து கொண்டு தனக்கே உரித்தான நகைச்சுவை பேச்சால் அரங்கில் அமர்ந்திருந்த 1600 பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தாமு
நகைச்சுவை நடிகர் தாமு தனது மிமிக்ரி நிகழ்ச்சியால் சபையினரை தன்வசப்படுத்தினார்.

நடனம்
செல்வி நிவேதிதா குழுவினரின் நடன நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டும்படி அமைந்திருந்தது.

கங்கை அமரன்
நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக "ட்யூன் அன்ட் டோன்" இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் தொகுத்து வழங்கி தானும் பாடி தான் காலங்களை வென்ற மாபெரும் கலைஞன் என்பதை நிரூபித்துவிட்டார்.

ஏற்பாடு
இவ்விழாவினை திருமதி. லக்ஷ்மிபிரியா, 89.5 ஹலோ எஃப்எம் திரு. ஹாரி மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். அனுசரணை வழங்கிய அனைவருக்கும் திரு. அனிஸ் ரஹ்மான் நன்றி தெரிவித்தார். கலை விழா ஏற்பாடுகளை திரு. சிகாமணி, திரு. கணேஷ், திரு, ரத்தனவேல், திரு ஷமீம், திரு. ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications