500 பேர் பலி.. காசா ஹாஸ்பிட்டலை இஸ்ரேல் தாக்கவில்லை.. பின்னணியில் யார்? பரபரப்பை கிளப்பிய ஜோ பைடன்
இஸ்ரேல்: காசாவில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் அந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை எனவும், பின்னணியில் வேறு டீம் உள்ளதாக கூறி இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. இன்று 13வது நாளாக போர் நீடிக்கிறது. இருதரப்பையும் சேர்த்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தற்போது வரை இஸ்ரேல் காசா மீது வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இலக்குகளை தேடித்தேடி குண்டு வீசி அழித்து வருகிறது. மேலும் காசா நகரை முற்றிலுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படை விரைவில் தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளது.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பே இந்த தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் மீது பழிபோடுகிறது. ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் திசைமாறி மருத்துவமனை மீது விழுந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில் தான் திட்டமிட்டப்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு நேற்று சென்றார். அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த பயணத்தை ஜோ பைடன் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு விமானத்தில் வந்திறங்கிய ஜோபைடன், அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டியணைத்து வரவேற்றார்.
இதையடுத்து ஜோ பைடன் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் குறித்து ஜோபைடன் விவாதித்தார். இந்த வேளையில் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஜோ பைடன் கூறும்போது, ‛‛அமெரிக்கா பாதுகாப்புத்துறையின் தகவலின் படி காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வேறு ஒரு டீம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை நீங்கள் நடத்தவில்லை'' என தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ள ஈரான் உள்பட பல நாடுகள் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் தான் ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால் ஜோ பைடன் அதனை மறுக்கும் வகையில் வேறு ஒரு டீம் தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜோ பைடனின் இந்த கருத்துக்கு தற்போது ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்னும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications