துரத்தி துரத்தி தொல்லைக் கொடுப்பதாக பெண் புகார்... ஜெர்மனியில் ‘அணில்’ கைது
பெர்லின்: தொந்தரவு கொடுப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெர்மனி போலீசார் அணில் ஒன்றைக் கைது செய்துள்ளனர்.
ஜெர்மனி போலீசாரின் அவசர பிரிவுக்கு கடந்த புதன்கிழமையன்று வினோதமான புகார் ஒன்று கிடைத்தது. அதாவது, வடக்கு ரெயின் வாஸ்பாலியாவிலுள்ள பாட்ராபை என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர், அணில் ஒன்று தனக்கு தொல்லைக் கொடுப்பதாக அப்புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும், ''நான் மேற்கு ஜெர்மன் நகரில் உள்ள தெரு வழியாக செல்லும்போது, என்னை அணில் ஒன்று விரட்டியடிக்கிறது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு உதவ வேண்டும்'' என அப்பெண் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண் காட்டிய அடையாளங்களின் படி சம்பந்தப்பட்ட அணிலைக் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "அந்த அணிலை கைது செய்து காவலில் வைத்திருக்கிறோம். அந்த அணிலுக்கு சோர்வு நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அணிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் உணவு அளிப்பது போன்ற புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications