பீதியைக் கிளப்பிய இன்னொரு ஜெர்மன்விங்ஸ்... ரோமுக்குப் பதில் வெனிசில் இறங்கியதால் பதட்டம்!
வெனிஸ்: இத்தாலியின் ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய ஜெர்மன்விங்ஸ் விமானம் வெனிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.
ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று ஜெர்மன் நாட்டின் ஹனோவர் பகுதியில் இருந்து இத்தாலியின் தலைநகர் ரோம் நகருக்குச் சென்றது. அப்போது பயணிகளில் இருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறினார்கள்.

இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்படவே அவர் வெனிசில் உள்ள மார்கோ போலோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ரோம் நகரில் தரையிறங்க வேண்டிய விமானம் வெனிஸில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். அவர்களுக்கு நடந்த விபரத்தை கூறியதும் பெருமூச்சு விட்டார்கள்.
இதனால் ரோமிற்கு உள்ளூர் நேரப்படி மதியம் 3.25 மணிக்கு சேர வேண்டிய விமானம் காலதாமதமாக இரவு 8.45 மணிக்கு சென்றடைந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே நிறுவனத்தின் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 150 பேர் உயிரிழந்தனர். அதே பீதியில் இருந்த மக்களுக்கு விமானம் திடீர் என தரையிறங்கியது அச்சத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications