இங்கிலாந்தில் பெண்கள் கூடி எடுத்த செல்பி படத்தில் 'பேய்'!
லண்டன்: இங்கிலாந்தில் இளம்பெண்கள் இருவர் சேர்ந்து செல்போனில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தில் பேய் போன்ற உருவம் ஒன்று பதிவாகி உள்ளது. இப்புகைப்படத்தை அப்பெண்கள் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்று தம் கொள்ளு தாத்தா, பாட்டிக் காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஆனால், செல்போனில் கேமராக்கள் வந்த பிறகு, மக்கள் மனதுக்குப் பிடித்த காட்சிகளை எல்லாரும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.
அதிலும், தற்போது தங்களைத் தாங்களே செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் உலகளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

கொண்டாட்டம்...
இந்நிலையில், கடந்தமாதம் இங்கிலாந்தின் நியூகாஸ்டில் பகுதியை சேர்ந்த விக்டோரியா கிரீவ்ஸ், கெய்லே அட்கின்சன் என்ற இளம்பெண்கள் 2 பேர் இணைந்து லண்டனில் உள்ள ஒரு மது பாரில், 'பெண்களின் இரவை' கொண்டாடினர்.

அதிர்ச்சி...
தங்களது மகிழ்ச்சியைப் பதிவு செய்யும் விதமாக இருவரும் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர் செல்போனில் பதிவாகிய அந்த புகைப்படத்தை பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

3வது நபர்...
காரணம், அந்தப் புகைப்படத்தில் அவர்களின் பின்னால் வேறு ஒரு பெண்ணின் உருவமும் பதிவாகியிருந்தது. ஆனால், நிஜத்தில் தங்கள் அருகில் அவ்வாறு யாரும் இல்லை என அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

விக்டோரிய உடையில்...
செல்பியில் பதிவாகியிருக்கும் அந்த மூன்றாவது பெண் வயதான தோற்றத்தில் விக்டோரிய உடையில் காணப்படுகிறார்.

ஊழியர்கள் தகவல்...
ஆனால், அந்த பாரில் வேலை செய்யும் ஊழியர்கள், தாங்கள் இதுவரை அங்கு பேய் எதுவும் பார்த்ததில்லை என்றும், பேயை பார்த்ததாக யாரும் தங்களிடம் தெரிவித்ததில்லையென்றும் கூறியுள்ளனர்.

பேய்க்கும் ஆசை...
இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த அப்பெண்கள், தங்களது செல்போனில் இருந்து அழித்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாருங்களேன், பேய்க்கும் செல்பி எடுக்கற ஆசை வந்திருக்கு...!












Click it and Unblock the Notifications