கொடுமை.. சார்ஜ் போட்டபடியே பாட்டு கேட்ட ஆல்வா.. வெடித்து சிதறிய செல்.. படுக்கையிலேயே போன உயிர்
செல்போன் சார்ஜர் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழந்தாள்
அஸ்தானா, கஜகஸ்தான்: ஆல்வாவுக்கு பாட்டு என்றால் ரொம்ப ஆசை.. சார்ஜ் போட்டபடியே செல்போனில் பாட்டு கேட்ட இந்த 14 வயது சிறுமியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.
கஜகஸ்தான் நட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பாஸ்டோப் என்ற நகரை சேர்ந்த சிறுமியின் பெயர் ஆல்வா அசெட்கிசி. 14 வயது பள்ளி மாணவி. பாட்டு என்றால் கொள்ளை ஆசை. தினமும் ராத்திரியில் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் பழக்கமாம்.

இப்படித்தான் சம்பவத்தன்றும், ராத்திரி செல்போனில் பாடல் கேட்டபடியே தூங்க போனார். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லை. அதனால் சார்ஜ் போட்டபடியே செல்போனை தலைக்கு அருகில் தலைகாணியில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை ரொம்ப நேரம் ஆகியும் மகள் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவளது ரூமுக்குள் சென்று பார்த்தனர். அப்போது தலைகாணி பக்கத்தில் இருந்த செல்போன் வெடித்து சிதறி கிடந்தது. தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்து கிடந்தாள் சிறுமி.
இதை பார்த்து பதறிய பெற்றோர், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர். ஆனால் அவள் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
நடுராத்திரி செல்போன் பேட்டரி வெடித்து சிதறி இருக்கிறது. இதில்தான் அவளுக்கு தலையில் பலமாக அடிபட்டு, படுக்கையிலேயே உயிர் பிரிந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications