ஹர்முஸ் ஜலசந்தியை மொத்தமாக கன்ட்ரோலில் எடுத்த ஈரான்! கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல்! வெளியான வீடியோ
தெஹ்ரான்: ஈரான் தலைவர் காமெனி கொல்லப்பட்டிருக்கும் நிலையில், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் ஆதரவு படைகள் முழுமையாக கைப்பற்றியிருக்கின்றன. இந்த பாதை வழியாக பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்றையும் அந்த படைகள் தாக்கியுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கை பொறுத்தவரை, இந்த ஹர்முஸ் ஜலசந்தி ரொம்ப முக்கியமான மேட்டர். சென்னை-பெங்களூர் பைபஸ் போல, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகத்தான் வெளியே வர வேண்டும்.

உலக அளவில் மொத்தமாக 20-30% எண்ணெய் கப்பல்கள் இந்த வழியை நம்பித்தான் இருக்கின்றன. ஆனால், ஈரான் தலைவர் காமெனிகொல்லப்பட்ட நிலையில், இந்த பாதையை ஈரான் ஆதரவு படைகள் அடைத்திருக்கின்றன. நேற்றிரவு ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஹர்முஸ் ஜலசந்தியை எந்த கப்பலும் பயன்படுத்தக்கூடாது என்று ஈரான் ஆதரவு படைகள் ரேடியோ மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தன.
ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி, sky light என்கிற எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று இந்த பாதையை பயன்படுத்தியது. உடனே இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது இந்த கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது. எனவே மற்ற கப்பல்கள் இந்த பாதையை பயன்படுத்த தயங்கி வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது. கப்பல் மீது தாக்குதல் நடத்தியதையும், அது பற்றி எரியும் வீடியோவையும் ஈரான் ஆதரவு படைகள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்திருக்கின்றன.
🚨فيديو أولي للناقلة Sky Light التي تم استهدافها قرب مضيق هرمز شمال ميناء خصب في سلطنة عمان#theseainarabic #ship #sea #port #Hormuz #strait #tanker #shipping #iran #gulf #oman pic.twitter.com/prWRNahvdf
— The Sea In Arabic البحر بالعربي (@Theseainarabic) March 1, 2026
ஏன் ஹர்முஸ் ஜலசந்தியில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது?
குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி, ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் பயணித்து ஓமன் வளைகுடாவுக்கு வர வேண்டும். இந்த பாதையில் உள்ள முகக்கியமான பகுதிதான் ஹர்முஸ் ஜலசந்தி. இந்த பகுதி, மிகவும் குறுகிறது. வெறும் 33 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது. இந்த பாதையை முடக்கும்போது இந்தியா கடுமையான சேதத்தை எதிர்கொள்ளும். அதை விட முக்கியம் சீனாவும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதுதான்.
சீனா பாதிக்கப்பட்டால், உலகம் முழுவதும் அதன் தாக்கம் இருக்கும். இந்தியா மிக மோசமான நிலைக்கு போதும். அதேபோல, சவுதி அரேபியாவின் வருவாய் கடுமையாக சரியும். இதெல்லாம் தற்போது டிரம்ப் செய்து வைத்திருக்கும் வரி சேட்டையை விட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..?












Click it and Unblock the Notifications