சும்மா கிடந்த சங்கை.. ஊதி கெடுத்த அமெரிக்கா! ஈரானுக்கு கைகொடுக்கும் சர்வதேச நாடுகள்!
தெஹ்ரான்: அணு ஆயுதம் இருப்பதாக ஈராக் மீது தாக்குதல் நடத்தியதை போலவே, ஈரான் மீதும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக ஈரானுக்கு, ஆயுத ரீதியாக சில சர்வதேச நாடுகள் உதவ முன்வர வாய்ப்பு இருக்கிறது.
எங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையில் அமெரிக்கா உள்ளே வந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்தது. இருப்பினும், இதை பொருட்படுத்தாத அமெரிக்கா நேரடி தாக்குதலில் இறங்கியிருக்கிறது. இன்று காலை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையத்தின மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் சண்டையில் எழுதப்படாத ஒரு உடன்பாடு இருந்தது. அதாவது இஸ்ரேலும், ஈரானும் தனது நட்பு நாடுகளில் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சண்டையில் அவர்களை இழுக்கக்கூடாது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியிருப்பதால், தற்போது ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளும் களத்தில் இறங்கலாம், அல்லது ஆயுத உதவியை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு உதவும் நாடுகளின் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பது ரஷ்யாதான். ஈரான் மற்றும் ரஷ்யா இடையே ஒரு வலுவான கூட்டணி இருக்கிறது. குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு. ஈரான் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது. பதிலுக்கு ரஷ்யா, ஈரானுக்கு Su-35 போர் விமானங்கள், Mi-28 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது.
ரஷ்யா, ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்காவிட்டாலும், அணுசக்தி தொழில்நுட்ப அறிவு, யுரேனியம் செறிவூட்டும் தொழில்நுட்ப உதவி, அல்லது அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு உதவும் இரட்டை-பயன் பொருட்களை வழங்கக்கூடும்.
சீனாவும் ஈரானுக்கு உதரவும். சீனா ஈரானின் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் கூட்டாளி. ஈரான் மீதான சர்வதேசத் தடைகளை மீறி, சீனா தொடர்ந்து அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 25 வருட ஒப்பந்தமும் உள்ளது. இருப்பினும் சீனா ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், இராணுவ உபகரணங்கள், தொழில்நுட்ப உதவி அல்லது பிற மேம்பட்ட அமைப்புகளை வழங்கலாம்.
ஈரானுக்கு உதவ வாய்ப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் வடகொரியா இருக்கிறது. வட கொரியா நீண்டகாலமாகவே ஈரானுடன் ஏவுகணை தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுமே சர்வதேசத் தடைகளை எதிர்கொள்வதால், ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகின்றன.
வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாகும். இருப்பினும், NPT இன் ஒரு பகுதியாக இல்லாததால், அது அணு ஆயுதப் பரவல் தடைகளுக்குக் கட்டுப்பட்டது அல்ல. இருப்பினும், வட கொரியா நேரடியாக அணு ஆயுதங்களை வழங்குவது என்பது உலக போரை ஏற்படுத்திவிடும். எனவே ஏவுகணை தொழில்நுட்பம் அல்லது அணு ஆயுத உற்பத்தி தொடர்பான அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த நாடுகள் எல்லாம் ஈரானுக்கு உதவும் என்ற சொல்லப்படுகிறது. இந்த உதவியை வைத்து அமெரிக்காவின் தாக்குதலையும், இஸ்ரேலின் அச்சுறுத்தலையும் ஈரானால் நிச்சயம் எதிர்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications