உலகையே அச்சுறுத்தும் கொரோனா.. 8000 பேர் பலி, 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு..
ஜெனிவா: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000த்தை எட்டி உள்ளது. இதேபோல் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,97,135 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த மோசமான தொற்று நோய் உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகின் பல நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது தெரியாமலும், குறைவாக பாதிக்கப்பட்ட நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து எப்படி பரவாமல் தடுப்பது என்ற அச்சத்திலும் உள்ளன.
சீனாவில் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கினாலும், இப்போது ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளைத்தான் மோசமாக பாதித்துள்ளது. இதேபோல் அரபு நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
தற்போது இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமாக உள்ளது. அங்கு ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 354 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இத்தாலியில் இதுவரை 2503 பேர் இறந்துள்ளார்கள். இத்தாலியில் கடந்த பிப்ரவரி 21ம் தேதியில் இருந்து இன்றைக்குள் இதுவரை 31506 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 16169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு செவ்வாய்கிழமை நிலவரப்படி 988 பேர் உயிழந்தார்கள். ஸ்பெயினில் 11 178 பேர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 3566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் இதுவரை 100 பேர் இறந்துள்ளனர். மலேசியாவில் 553 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 6573 பேரும், ஜெர்மனியில் 6000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வெளிநாட்டினர் 30 நாட்கள் வர தடை விதித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உத்தரவிட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகளில் 4 வாரங்களுக்கு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications